புத்தளம் எருக்கலம்பிட்டி நாகவில்லு
வடமேற்கில் புத்தள மாவட்டத்தில் ( புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி 10KM தூரத்திலும், கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி 130KM தொலைவிலும்) அமைந்துள்ள இயற்கை செழிப்புள்ள ஓர் அழகான கிராமம் எருக்கலம்பிட்டி நாகவில்லு ஆகும்.
அன்றொரு காலம் எம் வடபுல மக்கள் சிட்டுக்குருவி போல சிறகடித்து பல இடங்கள் சென்று பொருள் தோட்டங்களை தேடி சுதந்திர பறவைகளாய் சுற்றித் திரிந்தனர். மூதாதையர்களின் முத்தான கருத்துக்களை சொத்தாக பேணி அடியொற்றி வாழ்ந்து வரலாயினர்.
கண்ணியமாகவும்,கௌரவமாகவும், மரியாதையாகவும் வாழ்ந்து காட்டிய எம்மவர்களின் வழிநின்று வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வரலாறு படைத்த எம் மக்களால் பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியமான கலாச்சாரம் எமது பரம்பரை வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. எவரது கண் பட்டதோ 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகளினால் இரவோடிரவாக எவ்வித காரணமும் இன்றி விரட்டப்பட்டு கண்ணீரும் கம்பலையுமாக எதிர்காலம் என்னவென்று தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தனர் எம்மக்கள். காலங்காலமாக உழைத்த சொத்துக்கள் தேடிக்கொண்ட பொருளாதார நலன்கள் வாழ்க்கையை ஊட்டுவதற்காக ஏற்படுத்திய வசதிகள் அத்தனையும் இச்சந்தர்ப்பத்தில் பயனற்றவை ஆக்கப்பட்டன
வடக்கு கிழக்கில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக எம்வளம் நிறை, வனப்புமிக்க கிராமத்தை விட்டு மக்கள் வெளியேற்றப்பட நாட்டின் நாலா புறங்களிலும் குடியேறினர் வெளியேறிய இம்மக்கள் வேதனை சுமையோடு நெருப்பாற்றில் நீந்தி னர் நிலைகுலைந்து கலங்கினர். புத்தளம் மாவட்டம் உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அகதி முகாம்களிளும், தனியார் வீடுகளிளும், தனியார் காணிகளிலும் தஞ்சமடைந்து பஞ்சம் நிறை வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சரிந்து காணப்பட்டன இப்பகுதி மக்கள் நேசக்கரம் நீட்டி அன்புடன் உபசரித்து தற்காலிக வாழ்க்கை நடாத்த உதவினர் தமது வழங்கலின் வசதிகளில் சிலவற்றை பகிர்ந்து கொண்டனர். ஆயினும் வந்து சேர்ந்த மக்கள் தொகை மிக அதிகமானதால் அகதி முகாம்கள் தனியார் காணிகள் பொது இடங்கள் தனிப்பட்ட வீடுகளில் ஏராளமான மக்கள் அல்லல் நிறைந்த பல்வேறு கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அகதி முகாம் வாழ்க்கையினால் எமது கலை கலாச்சாரம் பண்பாடு கல்வி என்பன சிதைவுற்று சீரழிந்து சின்னாபின்னம் ஆக்கப்பட்டு வந்தது இவ்வாறான மாற்றங்களை தடுப்பதற்காக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் பாங்கில் உருவாக்கப்பட்டதே எமது எருக்கலம்பிட்டி அபிவிருத்திச் சங்கம். (EDA).
கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து குவலயத்தில் ஏற்றிய ஒளியாக பிரகாசித்த நமது ஊர் மக்கள் நாட்டின் நாற்புறங்களிலும் சிதறி சின்னாபின்னம் ஆக்கப்பட்டு பறந்து திரிந்து வாழ்ந்த நிலையை கருத்தில் கொண்ட எருக்கலம்பிட்டி அபிவிருத்திச் சங்கம் இம்மக்களின் ஒரு பகுதியினரை யாவது ஒன்றாக சேர்த்து ஒரே இடத்தில் குடியமர்த்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக 1995ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமம்.
இக்கிராம உதயத்தினால் மக்களின் வாழ்வில் புதிய தென்றல் வீசத்தொடங்கியது இது நம்பிக்கை ஊட்டக்கூடிய காற்றாக மக்களின் வாழ்வு பூங்காவில் வீசுவதற்கு முறை வாயிலாகவும் அமைத்து இம்மக்களின் சமகாலம் எதிர்காலம் என்பனவற்றை நிர்ணயிக்கும் கப்பலின் நங்கூரம் ஆகவும் இது பரிணமித்தது.
ஆதாரங்கள்
மர்ஹும் அல்ஹாஜ் நூர்டீன் மசூர்
(புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம் தசாப்த சிறப்பு மலர் 2006)
மர்ஹும் M.C.M. ஜுனைட் ( முன்னால் அதிபர் )
(புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம் தசாப்த சிறப்பு மலர் 2006)
Ads go here

Comments