மறைக்கப்பட்ட Iphone அம்சங்கள்.!!


உங்களது ஐபோனில் உங்களுக்கு தெரியாமல் பல அம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
நீங்கள் சென்ற அனைத்து இடங்களையும் பதிவு செய்யும் Map இருக்கின்றது. இதே போல் உங்களது ஐபோன் கருவியில் உங்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சில அம்சங்களை  தெரிந்து கொள்ளுங்கள். 

Text Sortcut

SMS Type செய்யும் போது சில வார்த்தைகளை பதிவு செய்தால் மீண்டும் Type செய்யும் போது அந்த வார்த்தையை முழுமையாக Type செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த அம்சத்தினை செயல்படுத்த 

Setting -- Genaral -- Keyboard-- Text Replacement Optionல் உங்களது Sortcut வார்த்தைகளை பதிவு செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்த பின் நீங்கள் சேமித்த வார்த்தைகளை முழுமையாக Type செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.



Keyboard

உங்களது Iphone கருவியில் மொழி மாற்றம் முதல் Chip Files வரை Type செய்ய பல கீபோர்டுகள் வழங்கப்பட்டுள்ளன, இவைகளை செயல்படுத்த ஐபோனின் Setting-- General-- Keyboard-- Keyboard Option செல்ல வேண்டும். இங்கு உங்களுக்கு பிடித்த கீபோர்டினை செட் செய்து கொள்ளலாம்.



Do Not Disturb

இரவு நேரங்களில் ஐபோன் உங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க கருவியில் இருக்கும் டூ நாட் டிஸ்டர்ப் ( do not disturb ) Opition னை செயல்படுத்தலாம். மேலும் நீங்கள் உறங்கும் குறிப்பிட்ட கால அளவினை மட்டும் செட் செய்யும் வசதியும் உங்களது ஐபோனில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Controls

உங்களது தலையை கொண்டு ஐபோனினை இயக்க முடியும். இதை செயல்படுத்த Setting-- General-- Aaccessibility-- switch Controls Optionனை Apply செய்ய வேண்டும்.


Apps

ஆப்பிள் உங்களது ஐபோனில் அழிக்க முடியாத 30 செயலிகளை Install செய்திருக்கும். இதில் பெரும்பாலான செயலிகளை யாரும் பயன்படுத்துவதில்லை. இவைகளை அழிக்க முடியாது என்றாலும் இவைகளை மறைத்து வைக்க முடியும், இதை செய்ய Setting-- General-- restriction சென்று கருவியின் Passcode enter செய்து உங்களுக்கு தேவையில்லாத செயலிகளை மறைத்து வைக்க முடியும்.



Custom Vibration

ஐபோன் கருவியில் தனிப்பட்ட Contact களுக்கு பிரத்யேக வைப்ரேஷன் செட் செய்ய Setting பகுதியின் Sounds-- Ringtune-- Vibration-- Creat New Vibration னை Click செய்து நீங்களே ஒரு வைப்ரேஷனை உருவாக்கி அதனினை பதிவு செய்து குறிப்பிட்ட Contact ற்கு Set செய்ய முடியும்.


Lock Screen

ஐபோனின் Lock எடுக்காமல் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க குறுந்தகவலின் இடது புறமாக Swipe செய்து Replay Option னை Click செய்து பதில் அளிக்கலாம்.


Map



நீங்கள் எங்கெல்லாம் செல்கின்றீர்களோ அத்தனை இடங்களையும் உங்களது ஐபோன் பதிவு செய்திருக்கும். அவைகளை கண்டறிய Setting Option ல் Privacy-- location Service -- system service -- Free Count Location பகுதியில் நீங்கள் சமீபத்தில் சென்ற இடம் சார்ந்த தகவல்களை பார்க்க முடியும்.




Tamil.gizbot

Ads go here

Comments