தகவல்களை பாதுகாப்பாக அழிப்பது எப்படி.??
உங்கள் பழைய போனை விற்க போகின்றீர்களா. உங்களுடைய எல்லா தனிப்பட்ட சேகரிப்புகளும் நீங்கி விட்டதா என்று பார்த்து பின் விற்க வேண்டும். Android Phoneல் இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்.
Micro SD Card
உங்களது பழைய போனில் Micro SD Card இருந்தால் உங்கள் புதிய போனில் அதை நுழைத்து பயன்படுத்தவும். Photo, Video போன்ற முக்கியமான தரவுகள் தெரியாமல் இடம் மாறி செல்லக்கூடும்.
Backup
உங்கள் புதிய போனில் Micro SD card இல்லையென்றால் அதோடு நீங்கள் சில காரணங்களுக்காக போனில் உள்ள தரவுகளை Delete செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் முதலில் உங்களது எல்லா Photos மற்றும் Videos Backup செய்ய வேண்டும்.
USB
USB கேபிலை பயன்படுத்தி கணினியில் உங்கள் போனை இணைக்க வேண்டும். நீங்கள் Mac கணினி பயன்படுத்தினால் இதை செய்வதற்கு முன்பு
( Android File Transfer ) நீங்கள் நிறுவி இருக்க வேண்டும்.
SD Card
SD CArdல் இருந்து உங்கள் கணினியில் சேமிக்க வேண்டிய எல்லாவற்றையும் Copy செய்யவும். Copy செய்தவுடன் உங்கள் போனை Switch Off செய்து விடவும். அடுத்து உங்கள் Memory Card Format செய்து கொள்ளலாம்.
Settings
முதலில் போனின் Settings> Storage சென்று ( Erase SD card ) என்பதை அழுத்தவும். உங்கள் Cardன் எல்லா தரவுகளையும் இழக்கின்றீர்கள் என்ற எச்சரிக்கை வாக்கியத்தை காண்பீர்கள்.
தொடர்வதற்கு Erase SD card பட்டனை அழுத்தவும். உங்கள் SD Card கடவுசொல்லால் பாதுகாக்கப் பட்டிருந்தால் அதற்கான Password கொடுத்து திறக்கவும்.
Safe
ஒரு கை தேர்ந்த நபரால் இதற்கு பிறகும் உங்கள் formatted Sd கார்டில் இருந்து கோப்புகளை எடுக்க முடியும். ஆனால் இதை சரி செய்யும் சரியான வழி "layering". இதற்கு காலியான இடத்தில் ஏதாவது ஒன்றை நிரப்பவும், பின் Delete செய்யவும். அதன் பின் இதையே ஒரு சில முறை செய்தால் ஒரிஜினல் தரவு காணாமல் போகும்.
ஒரு வேளை 2GB SD Card இருந்து அதை நீங்கள் அழித்திருந்தால் அதை உங்கள் கணினியுடன் இணைக்கவும். Card கு உங்கள் File Copy செய்யவும். கோப்பை Delete செய்யவும். இதையே இரண்டு அல்லது மூன்று முறை செய்யவும். இதை செய்ய 10 நிமிடத்திற்கு மேல் ஆகாது. ஆனால் அதன் பின் உங்கள் கார்டை பாதுகாப்பாக விற்க முடியும்.
Tamil.gizbot
Tamil.gizbot
Ads go here
Comments