தென்னிந்தியத் தொடர் நாடகங்கள் இலங்கை முஸ்லிம்களிடம் ஏற்படுத்தும் தாக்கங்கள்



பொதுவாக ஊடகம் என்பது தகவல்களைப் பரிமாறுகின்ற சாதனமே ஊடகம் என்பார்கள்.

தென்னிந்திய ஊடகத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் நாட்டு நடப்புகள், சமூதாய விழிப்புணர்வுத் தகவல்கள், அரசியல் பிரச்சாரம் என்று இருந்த இந்திய ஊடகங்கள் இன்று சமூதாய சீரழிவுக்கு இட்டுச் செல்கின்ற அளவுக்கு மாறிவருகின்றது .

தொலைக்காட்சி என்ற அழகிய கண்டுபிடிப்பு இன்று அதுவே சமூக சீர்கேட்டுக்கு ஆளாக மாறிவிட்டது . இன்று ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு திரைப்படமாவது ஒளிபரப்பாத அலைவரிசேயே இல்லை! காணவும் முடியாது. எந்த அலைவரிசையில் தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள் இல்லையோ அந்த அலைவரிசையை எமது சமூகம் பார்ப்பதே கிடையாது அந்த அளவு எமது சமூகம் பழகிவிட்டது. அதிலும் குறிப்பாக எமது முஸ்லிம் பெண்கள் அதைவிட வேகமாக இருக்கின்றார்கள். தென்னிந்திய நாடகங்களின் பாதிப்பால் முஸ்லிம் பெண்கள் சீரழிந்து வருகின்றார்கள்.

இது இந்தியாவில் சமூக சீர்கேட்டையும், கலாச்சார சீர்கேட்டையும் ஏற்படுத்தியது மாத்திரமல்லாமல் இலங்கையிலும் ஊடுருவ ஆரம்பித்துள்ளது.

இன்று எமக்குப் பார்க்க முடியும் எமது இலங்கைத் தொலைக்காட்சிகளில் அதிகமாகப் பாடல்கள் கேட்போர் யார் ? எமது முஸ்லிம் பெண்களே!

அதில் நடாத்தப்படுகின்ற நேரடி நிகழ்ச்சிகளில் அவர்கள் call எடுத்து எனது கணவன் என்து உம்மா, வாப்பா, எனது தங்கை மற்றும் எனது பிள்ளைகள் அனைவருக்கும் ஒரு நல்ல பாட்டுத்தாருங்கள் என்று கூச்சப்படாமல் பாடல் கேட்கின்றார்கள். ஸுப்ஹானல்லாஹ்!

அண்மையில் நான் ஒரு சாப்பாடுக் கடைக்கு (Hotel) க்கு சாப்பிடுவதற்குச் சென்றேன் அங்கு வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்காக தொலைக்காட்சி (TV) வைக்கப்பட்டுள்ளது . அதில் ஒரு நேரடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது . அதில் விரும்பிய நபர் call எடுத்து பாடல் கேட்க முடியும் அப்படியான ஒரு நிகழ்ச்சிதான் அது.

அந்த நிகழ்ச்சியில் ஒரு முஸ்லிம் பெண் தொடர்பை மேற்கொண்டு தனது தாய் ஆயிஷா தனது கணவர் ஜஃபர் தனது சகோதரி ஆபிதா மற்றும் தனது பிள்ளைகாளான அப்துல்லாஹ் மற்றும் சதாம் போன்றோர்களுக்கு ஒரு புதிய பாடல் தாருங்கள் என்று கூச்சப்படாமல் கேட்டார் . ஸுப்ஹானல்லாஹ் !!!!!

எங்கே எமது இலங்கை முஸ்லிம் சமூகம் உள்ளது என்று பார்த்தீர்களா? இதுதான் இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலை.

தென்னிந்திய தொடர் நாடகங்கள் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன ?

01) ஆடை அலங்காரத்தில் தாக்கம்

முஸ்லிம்களுக்கென தனியான ஆடை அலங்காரங்களை இஸ்லாமிய ஷரிஆ வரையறை செய்துள்ளது. ஆனால் இன்று இஸ்லாமிய ஷரிஆ வரையறையின் எல்லையைத் தாண்டி விட்டது.

இன்று எமது பெண்களை முட்டாள் ஆக்குவதற்காக இந்த நடிகை அணிந்த ஆடை அல்லது இந்த தொடர் நாடகங்களில் நடிகைகள் போடுகின்ற ஆடையென்று பெயர் சூட்டி வியாபாத்திற்காக விற்பனை செய்கின்றார்கள் . இதை அறியாத எமது முஸ்லிம் பெண்கள் பெருநாள்களுக்காக ஆடைகளைத் தெரிவு செய்கின்ற போது கெளரவத்திற்காக இவ்வாறான ஆடைகளை அணிகின்றார்கள் . இன்னும் சில பெண்கள் கடைகளில் இப்படியான ஆடைகளைக் கேட்டு வாங்குகின்றார்கள்! ஸுப்ஹானல்லாஹ் !!

இது ஆடைகளில் மாத்திரமல்ல பழக்க வழக்கங்களிலும்தான். இதில் பெண்கள் மாத்திரமல்ல இளைஞர்களும்தான்.

02) நேரம் வீணடிக்கப்படுகின்றது

இஸ்லாம் காலத்திற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது. இறைவன் காலத்தின் மீது சத்தியமாக என்றும் கூறுகின்றான்.

நபிஸல் அவர்கள் கூறினார்கள் இரண்டு அருட் கொடை விடயத்தில் அதிகமான மனிதர்கள் ஏமாற்றம்மடைந்துள்ளனர். அவை ஆரோக்கியமும் ஒய்வும் ( ஹதீஸ் )

இன்னொரு சந்தர்பத்தில் நபிஸல் அவர்கள் கூறினார்கள் ஐந்து விடையங்களுக்கு முன் ஐந்து விடையத்தைப் பயண்படுத்திக் கொள். உனக்கு சோலிகள் வரு முன் ஒய்வைப் பயன்படுத்திக் கொள். உனது வயோதிபத்திற்குமுன் இளமையைப் பயன்படுத்திக் கொள். உனக்கு சுகயீனம் ஏற்படு முன் ஆரோக்கியத்தைப் பயன்படுத்திக் கொள்.
உனக்கு ஏழ்மை வருமுன் வசதியைப் பயன்படுத்திக் கொள். உனக்கு மரணம் வருமுன் வாழ்கையைப் பயன்படுத்திக் கொள் (ஹதீஸ்)

இப்படி அடிக்கிக் கொண்டே செல்லலாம் . ஆனால் இன்று நாங்கள் இறைவனுக்கு துதி செய்வதை விட இப்படியான நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்குத்தான் அதிகமான நேரங்களை நாம் செலவிடுகின்றோம் . இதை நாங்கள் திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்.

03) சமூக சீர்கேடு

இன்று குடி ,களவு , விபச்சாரம் , பாலியல் துஸ்பிரையோகம் போன்றவற்றின் விளிம்பில் எமது சமூகம் தொத்திக் கொண்டிருக்கின்றது . இஸ்லாம் ஒரளவு இலங்கையில் வளர்ச்சி அடைந்தாலும் இன்று சமூக சீர்கேடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதற்கு காரணம் தெனிந்திய திரைப்படங்களின் தாக்கம் என்றும் சொல்ல முடியும்.

தென்னிந்திய தொடர் நாடகங்களின் தாக்கங்களால் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர் கொள்ள இருக்கும் பிரச்சினை

01) இலங்கையில் பெளத்த மக்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய பிழையான புரிதல்கள் உருவாகும்.

02) முஸ்லிம்கள் பற்றிய பிழையான பதிவுகள் ஏற்படும்.

எனவே இதற்கான தீர்வை நான் உங்களின் கைகளில் ஒப்படைக்கின்றேன்!
இதைக் குறைப்பதற்கு நாங்கள் எப்படியான வழிமுறைகளைக் கையாளலாம்?
கூறுங்கள் …

meelparvai
Ads go here

Comments