Audio,video Photo களை மிக வேகமாக Convert செய்துகொள்ள உதவும் Software
Format Factory எனும் மென்பொருளானது எமது கணினியில் இருக்கக்கூடிய Audio,video Photo ஒரு வடிவத்தில் இருந்து இன்னும் ஒரு வடிவத்திற்கு மிக வேகமாக மாற்றித்தருகின்றது.
மேலும் CD/DVD இறுவட்டுக்களில் இருந்து Audio,video Photo கோப்புக்களை வேறு பிரித்து பெற்றுக்கொள்ள உதவுவதுடன் புகைப்படங்களையும் ஒரு வடிவத்தில் இருந்து இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள உதவுகின்றது.
மேலும் உங்கள் Audio,video Photo கோப்புக்களை இந்த மென்பொருளின் ஊடாகவே ஒன்றினத்துக் கொள்ளவும் வேறுபிரித்துக் கொள்ளவும் முடியும்.
இவைகள் தவிர ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களுக்கு Rename செய்யும் வசதியும் குறிப்பிட்ட ஒரு Multimedia கோப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும் முடிகிறது.
இந்த மென்பொருள் மூலம் பெற முடியுமான முக்கிய வசதிகள்.
இந்த மென்பொருள் மூலம் எந்த ஒரு வீடியோ கோப்பினையும் iPhone, iPad மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வடிவில் மாற்றித்தருவதுடன் MP4, 3GP, AVI, GIF, WMV, RMVB, MKV, VOB, MOV, MPG, FLV, SWF போன்ற கணினியில் இயங்கக்கூடிய வடிவங்களுக்கும் மாற்றித்தருகின்றது.
எந்த ஒரு Audio கோப்பினையும் MP3, FLAC, WMA, AAC, AMR, M4A, MMF, M4R, WAV, OGG, WavPack போன்ற வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
எந்த ஒரு புகைப்படத்தினையும் JPG, ICO, BMP, PNG, GIF, TGA, TIF, PCX போன்ற வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
புகைப்படங்களில் Zoom, Flip, Rotate, Resize போன்ற மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
கணினியை பயன்படுத்தும் எந்த ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ள முடியுமான இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
குறிப்பு --- நான் இந்த Software இனை 3 வருடங்கள் பாவிக்கின்றேன். ரொம்ப அருமையான மற்றும் முற்றிலும் இலவச Software.
File Size - 55MB
Ads go here
Comments