மர்ஹூம் நூர்தீன் மசூர் அவர்கள் மரணித்து இன்றுடன் 5 வருடங்கள்
சமூகத்தின் இருப்பை கவனத்தில் கொண்டு தனது சுகபோகங்களை தக்கவைக்க வேண்டும் தான் மட்டும்தான் தனது பிரதேசத்தில் அரசியல்வாதியாக இருக்க வேண்டும்,அதிகாரம் தனக்கும்,
தனது குடும்பத்திடம் மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்ற மனபக்குவம் உள்ள அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இருந்து வேறுபட்ட அரசியல்வாதியாக செயற்பட்டவன்னி முஸ்லிம்களின் உள்ளங்களில் வாழும் மர்ஹூம் நூர்தீன் மசூர் அவர்கள் மரணித்து 5 வருடங்கள் ஆகின்றன
தனது குடும்பத்திடம் மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்ற மனபக்குவம் உள்ள அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இருந்து வேறுபட்ட அரசியல்வாதியாக செயற்பட்டவன்னி முஸ்லிம்களின் உள்ளங்களில் வாழும் மர்ஹூம் நூர்தீன் மசூர் அவர்கள் மரணித்து 5 வருடங்கள் ஆகின்றன
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு மாபெரும் விருட்சம். முஸ்லிம்களின் தனித்துவமான சமூகக் கட்சி. அந்தத் தாபனத்தின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபினால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு பெருமகனே மர்ஹூம் மசூர் என்றால் அது மிகையில்லை.
இளைஞர் மசூரை கட்சிக்குள் உள்வாங்கி, அரவணைத்து, அன்பு செலுத்தி பாராளுமன்ற கதிரையில் இருத்திய பெருமை பெருந் தலைவர் அஷ்ரபையே சாரும். முஸ்லிம்களின் தனித்துவம், உரிமை, இருப்பு, அபிலாசைகளை காக்கும் புனிதமான நோக்கமுடனேயேஅஷ்ரப்கட்சியைஉருவாக்கினார்.அந்த தனித்துவத்திற்கு பங்கம் ஏற்பட்ட வேலைகளில் துணிச்சலுடன் போராடி சதிகளை முறியடித்து கட்சியையும் தலைமைத்துவத்தையும் பாதுகாப்பதில் மர்ஹூம் மசூர் முன்னிலை வகிக்கித்தார்.
இந்த வகையில் கட்சியின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. மன்னார், எருக்கலம்பிட்டியில் பிறந்த நூர்தீன் மசூர், யாழ். பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது குடும்பம் மன்னாரிலேயே செல்வாக்கு மிக்க பிரபலமான குடும்பமாகும். தந்தை ஒரு சட்டத்தரணி என்பதுடன் சமூகத்தின் மத்தியில் பிரபலமானவராக காணப்பட்டார். பட்டதாரியான இவர், தந்தையின் மறைவுக்குப் பின்னர் வியாபாரத் துறையில் கவனம் செலுத்தி பிரபல வர்த்தவராக செயற்பட்டதோடு சமூகப் பணியில் முன்நின்று பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார்.
அந்தவகையில் வறிய மக்களுக்கு உதவுவதில் நாட்டம் காட்டினார். இவ்வாறான செயற்பாடுகளினால் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் மு.கா.வில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். வன்னி மக்களின் அபிமானத்தையும், ஆதரவையும் பெற்றிருந்த மசூர் பொதுத் தேர்தலில் மிக இலகுவாக வெற்றி பெற முடிந்தது.
வன்னி மக்கள் மத்தியிலே மு.கா வின் செல்வாக்கு குறைந்து வருகின்றது என்ற எண்ணப் போக்கு தலைதோங்கிய காலம் ஒன்றிலேயே இப்பெருமகனின் அரசியல் வரவு இடம்பெற்றது. அரசியலில் புதிதாக இருந்தாலும், தனது புத்திசாதுர்யத்தால், எளிதில் வெல்ல இவரால் முடிந்தது. வெற்றியின் பின் வன்னியில் மு.கா.வின் செல்வாக்கை படிப்படியாக உயர்த்தினார்.
சமூகத்தின் இருப்பை கவனத்தில் கொண்டு தனது சுகபோகங்களை தக்கவைக்க வேண்டும் என்பதில் இருந்து விடுபட்ட ஒரு வித்தியாசமான அரசியல்வாதியாக செயற்பட்டார். வன்னி அரசியல் கள நிகழ்வுகளை அவதானித்து அதற்கேற்ப சமூக அரசியல் செய்து காட்டினார். தான் மட்டும்தான் தனது பிரதேசத்தில் அரசியல்வாதியாக இருக்க வேண்டும், அதிகாரம் தனக்கும், தனது குடும்பத்திடம் மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்ற மனபக்குவம் உள்ள அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இருந்து வேறுபட்ட அரசியல்வாதியாக செயற்பட்டதோடு தனது சமூக அரசியலை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்.
தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது அதே வேட்பாளர் பட்டியலில் சமூக நலன் கருதி தனது முழு ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் இணை வேட்பாளராக அமைச்சர் ரிசாட் பதியுதீனை அப்போது இடம்பெற செய்தார். அத்துடன் பாராளுமன்றத்திற்கு தன்னுடன் அவரையும் இணைத்துக்கொண்டு செல்ல வழிவகுத்தார்.
வன்னி தேர்தல் தொகுதியில் இரண்டு முஸ்லிம்களை எம்.பியாக்கிய சாணக்யம் இவரையே சாரும். தமிழ் – முஸ்லிம் உறவை பலப்படுத்துவதில் பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். குறிப்பாக முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டார்.
அவ்வாறு இடம்பெறும் மீள்குடியேற்றம் தமிழ் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார். இதனால் நிர்வாக ரீதியாக செயற்பட்டு வந்த தமிழ் அதிகாரிகளுக்கு மத்தியில் சினேகமான முறையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை செயற்படுத்தி காட்டினார். வன்னி அபிவிருத்தி குழு தலைவராகவும், வன்னி புனர்வாழ்வு அமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் பல்வேறு வகையான அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டிருந்தார்.
குறிப்பாக மீன்பிடி தொழிலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு உரிய நிவாரனங்களை பெற்றுக்கொடுத்து மீன்பிடி துறையை ஊக்குவித்தார். இதனால் பிரதேச தமிழ் அரசியல்வாதிகளுடனும் ஒன்றித்து சுமுகமான முறையில் செயற்பட்டு வந்ததை நாம் அவதானிக்க முடியும்.
நாட்டின் விசுவாசத்தில் மிகுந்த கரிசனையோடு செயற்பட்ட தனித்துவமான ஆளுமையை கொண்டவராக காணப்பட்டார். வட-கிழக்கில் விடுதலை புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலே அரச நிர்வாகங்கள் செயற்பட்டு வந்தது. இதனால் வட – கிழக்கு பிரதேசங்களில் நாட்டின் சுதந்திர தினங்களை விடுதலை புலிகள் பகிஸ்கரிக்க வேண்டும் என்று செயற்பட்டு வந்த நேரத்தில், வன்னி அரச நிறுவனங்களில் தேசிய கொடிகளை ஏற்றி சுதந்திர தின நிகழ்வுகளை நடத்தி தேசத்திற்கு நாட்டின் மீது இருந்த பற்றை தனது ஆளுமையின் ஊடாக வெளிப்படுத்தினார்.
இவ்வாறான அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்ட இவர் தனது தூரநோக்கத்தின் அடிப்படையிலும் சமூக அரசியல் இருப்பை பலப்படுத்தி அதிகரிக்க வேண்டும் என்பது வன்னியை ஒரு முன்மாதிரியான பிரதேசமாக அடையாளப்படுத்தினார். இன்று வன்னி தேர்தல் தொகுதியில் இரண்டு முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றில் அலங்கரிப்பதற்கு மர்ஹூம் மசூர் அன்று இட்ட பலமான அடித்தளமே பிரதான காரணம். குறிப்பாக வன்னியில் இரண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவ அதிகாரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை சாதித்துக்காட்டிய ஒரு செயல்வீரனாக மர்ஹூம் நூர்தீன் மசூர் காணப்படுகின்றார் .
மு.கா.வின் வரலாற்றில் அக்கட்சி மூலம் பாராளுமன்றம் போகும் பிரதிநிதிகளில் சிலர் கட்சியின் கட்டுக்கோப்பு, வளர்ச்சி பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் தமது கொள்கையில் மசூர் தளம்பவில்லை. மக்கள் அவரையும், அவரை மக்களும் நம்பியிருந்ததுடன், அவரது மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்பட்டது.
அவர் வன்னியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கால கட்டத்தில் வன்னி மக்களுக்கு ஆற்றிய சேவை மட்டிட முடியாது. கட்சியின் வளர்ச்சிக்காக அவர் பெரிதும் பங்களித்துள்ளார். வன்னிக் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் அவரை நேசிக்கின்ற அன்பர்களும், ஆதரவாளர்களும் இன்றும் உள்ளனர். மக்கள் பிரதிநிதி ஆவதற்கு முன்னரும் அவர் மக்கள் சேவகனாக வாழ்ந்தவர்.மக்களது தேவைகளை நிறைவு செய்தவர், பள்ளிவாயல்கள், மத்ரசாக்கள்,பாடசாலைகள் போன்ற பொதுத் தேவைகளுக்கு என சொந்த நிதியை நன்கொடையாக வழங்கியவர். அதனால் தான் மக்கள் அவரை நேசித்தனர்.
வன்னி தேர்தலில் அவர் ஒருமுறை தோற்றபோதும் கூட மக்களை விட்டு விலகவில்லை. அந்த மக்களின் இன்ப, துன்பங்களில் கலந்து அவர்களுடன் உள்ள பிணைப்பை அதிகப்படுத்தினார்.
ரணில் விக்கிரமசிங்க காட்சியிலே வன்னி புணர்வாழ்வு அமைச்சராக இருந்து வன்னிமக்களுக்கான நல்வாழ்வுக்கு அத்திவாரம் இட்டார். வன்னி மாணவர்கள் உயர் கல்விக்காக ஆண்டு தோரும் 100 புலமைபரிசில்களை தனது சொந்த நிதியில் வழங்கிவந்தார். விதவைகள், அனாதைகள், வாழ்விழந்த பெண்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுத்தார்.
சுயதொழில் வாய்ப்புக்களை ஊக்குவித்தார். இடம்பெயர்ந்த மாணவர்கள் கற்ற பாடசாலைகளில் பௌதீக வளத்தேவைகளையும், ஆசிரியர் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்தார். இஸ்லாமிய சர்வதேச மாநாடு மலேசியாவில் நடந்த போது அங்கு சென்ற அவர், மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மட உட்பட மகாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாக மகஜர் ஒன்றைக் கையளித்ததுடன் அங்கு வந்த பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து முஸ்லிம் அகதிகளின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தினார்.
குறிப்பாக பேசாலை, வங்காலை, முசலி, சிலாவத்துறை போன்ற மீனவ கிராமங்களுக்கு மின்சார வசதிகளை பெற்றுக் கொடுத்தார். இவ்வாறு வன்னி மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்த அவர் எதிர்பாராத விதமாக காலமானார். அவரின் இழப்பால் வன்னி மண் ஒட்டு மொத்தமாக கதறியழுதது.
அவரது இழப்பு வன்னி மக்களுக்கு மட்டுமின்றி முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். அதேபோன்று மு.கா.விற்கு அவரது மறைவு வன்னியில் இன்றும் நிவர்த்தி செய்ய முடியாத அளவிற்கு பாரிய இடைவெளியாக மாறியுள்ளமை அவதானிக்கத்தக்கது. மு.கா வின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம்களின் உள்ளங்களில் வாழ்வது போல் வன்னி முஸ்லிம்களின் உள்ளங்களில் மர்ஹூம் நூர்தீன் மசூர் என்ற நாமம் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
By: slmcvelichcham
Ads go here

Comments