சோம்பேறிகளுக்கு நல்ல செய்தி : தானாக சரி செய்து கொள்ளும் கட்டில்



OHEA எனும் ஸ்பெயின் நிறுவனம் இந்த மின் கட்டிலை உருவாக்கியுள்ளது. நித்திரையின் பின்னர் மறுநாள் காலை இக்கட்டிலின் போர்வைகள் எப்படி கசங்கியிருந்தாலும், தானாக சரிசய்துவிடுகிறது.

50 செக்கன்களுக்குள் வேலை முடிந்துவிடுகிறது. தானாக இயங்குவதற்கும், மெனுவலாக இயங்குவதற்கும் இரண்டு பட்டன்கள் உள்ளன. Automatic ஐ அழுத்திவிட்டீர்கள் என்றால் படுக்கையை விட்டு நீங்கள் எழுந்த 3 செக்கனில் தானாக சரிசெய்ய ஆரம்பித்துவிடும். 

இன்னமும் இக்கட்டிலுக்கு விலை நிர்ணயிக்கபப்டவில்லை. விரைவில் சந்தைக்கு வரும் என்கிறார்கள். அங்கு கைவைத்து, இங்கு கைவைத்து, இப்போது படுக்கை வரை மின் இயந்திரங்கள் ஆக்கிரமித்துவிட்டன. நீங்கள் மகா சோம்பேறியாவதற்கு இந்த புதிய தொழில்நுட்பத்தை விட வேறென்ன தேவை?
Ads go here

Comments