புகைத்தல் புற்றுநோயை உண்டாக்கும்
நுரையீரலில் உள்ள திசுக்களில் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சி ஏற்படுவதே நுரையீரல் புற்றுநோய் எனப்படுகிறது. இவ்வாறான உயிரணு வளர்ச்சி நுரையீரல் தவிர அருகில் இருக்கும் உயிரணுக்களில் ஊடுருவி பரவுவதால் புற்றுநோய் உடலில் பரவுவதற்கு வழிவகுக்கிறது.
பெரும்பாலான முதன்மையான நுரையீரல் புற்றுநோய்கள் தோல் மேல்புற உயிரணுக்களுடன் சேர்ந்து நுரையீரலின் தீவிரப் புற்றுநோயாக உண்டாகிறது. மனிதர்களின் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு அதிக பங்கேற்பது நுரையீரல் புற்றுநோய் ஆகும். 2004 ஆம் ஆண்டு வரை உலகளவில் 1.3 மில்லியன் மக்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
மூச்சுத் திணறல், இருமல் (இரத்தம் வருமாறு இருமுவது) மற்றும் உடல் எடை குறைதல் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக உள்ளன.
Ads go here
Comments