கோப்பி அருந்துவதால் இருதய நோயைத் தவிர்க்கலாம்
இருதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இரத்த குழாய்களில் படியும் கொழுப்பினை தினமும் 3 முதல் 5 முறை கோப்பிகள் அருந்துவதன் மூலம் தவிர்க்க முடியும் என்று தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
25,000 இற்கும் அதிகமான நபர்களை ஸ்கான் செய்து ஆராய்ந்த இந்த விஞ்ஞானிகள்,தினமும் மிதமான அளவு கோப்பி அருந்துபவர்களுக்கு இரத்த குழாய்களில் கொழுப்பு பொருட்கள் படிவதற்கான ஆரம்பமான, ”கல்சியம் படிதல்” குறைவாகக் காணப்பட்டதாக கூறியுள்ளனர்.
கோப்பி அருந்துவது, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யலாம் என்று சில விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியும் உள்ளனர்.
Ads go here
Comments