கர்ப்பிணிப் பெண்கள் பரிசிடமோல் பயன்படுத்துவது தொடர்பில் ஆய்வு அதிர்ச்சி தகவல்
கர்ப்பிணிப் பெண்கள் பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் தாய்மார்களால் பிரசுவிக்கப்படும் குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளமையே இதற்குக் காரணம் என, வைத்தியர் ரத்னசிறி ஹேவாகே குறிப்பிட்டுள்ளார்.
நோர்வே – ஒஸ்லோ பல்கலைக்கழகம் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. 48,000 தாய்மார்களிடம் சுமார் மூன்று வருடங்கள் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரத்னசிறி ஹேவாகே தெரிவித்துள்ளார்.
எனவே பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் கர்ப்பிணிகள் வைத்தியரிடம் உரிய ஆலோசனை பெருவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Ads go here
Comments