பாடசாலை கீதம் - மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மஹா வித்தியாலயம்




ஆண்டவன் அருளை வேண்டி நின்றோமே

அவணியில் வாழ்வதற்கே

கண்ணான கல்விதனை

எந்நாளும் போற்றிடுவோம்

                                                (ஆண்டவன்)



மாணவர் வாழ்வு மலர்ந்திட வேண்டும்

மாநிலம் ஓங்கிடவே மாதுயர் நீங்கிடவே

கல்வியே செல்வம் உலகினிலே

கற்றாய்ந்து நடந்திடுவேம்

                                                 (ஆண்டவன்)



ஆசிரியரை அடிபணிவோமே

அன்போடு போற்றிடுவோம் பண்போடு வாழிந்திடுவோம்

ஒழுக்கமே உயிராய் ஓம்பிடுவோமே

உண்மையைப் பேசிடுவோம் நன்மையை செய்திடுவோம்

                                                     (ஆண்டவன்)



எருக்கலம்பிட்டியிலே இயங்கும்

ஈடிணையில்லா கலையகமே

எங்கள் மகளிர்க் கல்லூரி வாழ்க

எந்நாளும் வாழிய வாழியவே..



                                                      (ஆண்டவன்)
Ads go here

Comments