அப்பிளுக்கு போட்டியாக களமிறங்கவுள்ள கூகுள்
இணையத் தேடல் பொறி நிறுவனமான கூகுள் மொபைல் பரிமாற்றங்களுக்கான சிறந்த மென்பொருளை தயாரித்த சொப்ட்கார்ட் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது. கூகுளின் இத்திட்டம், ஆப்பிள் நிறுவனத்தின் அப்பிள் கட்டண சேவைக்கு போட்டியாக அமையும் என டெக்க்ரஞ்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் இந்நிறுவனத்தை 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்க சாப்ட்கார்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிறுவனத்தை வாங்குவதன் மூலம் கைத்தொலைபேசி கட்டண பட்டியல்கள் மற்றும் புதிய கைத்தொலைபேசி வாங்குவதில் சலுகை மற்றும் தவணை திட்டம் போன்ற பல நன்மைகள் உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Ads go here
Comments