பாடசாலை கீதம் - புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயம்
மேதினி மீதே – கல்வி
மேன்மையானதே
(மேதினி மீதே)
ஆண்டவன் அருளால் உலகில்
அவதரித்தோம் நாமே
மீண்டும் அவனருள் வேண்டுவதற்கு
வேண்டும் கல்வியே
(மேதினி மீதே)
சாதி சமய பேதமின்றி
சமத்துவம் காட்டிடவே
நீதி தர்ம நுால்கள் அணுதினம்
நிச்சயமாயப் படிப்போம்
(மேதினி மீதே)
பஞ்சம் என்றொரு பேரில்லாமல்
பறக்கடித்திட வேண்டும்
வஞ்சகம் பொறாமை வாழ வழியின்றி
வழி வகுத்திட வேண்டும்
(மேதினி மீதே)
வாழிய உலகம் வாழிய கழகம்
வாழிய நீடூழி
வாழிய ஆசான் வாழிய செந்தமிழ்
வாழிய... வாழியவே...
(மேதினி மீதே)
Ads go here
Comments