எருக்கலம்பிட்டி முஸ்லிம்கள் வரலாறும் பாரம்பரியங்களும்



கடல் வளமும், நில வளமும் நிரம்பப் பெற்றுள்ள இக்கிராமத்தில் முத்துக்குளித்த்ல், சங்கு குளித்த்ல் தொழில்களோடு மீன்பிடித்தொழிலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. 
தென்னை, பனை, மரமுந்திரி வளத்தையும் அவற்றை மையமாகக் கொண்ட பல தொழில் வளத்தையும் இக்கிராமம் கொண்டுள்ளது. இக்கிராமத்தின் ஆரம்பக்குடிகள் அரேபிய வர்தகர்களினதும் தென்னிந்திய முஸ்லிம்களினதும் பரம்பரையைச் சார்த்வர்களாக இருந்து வந்திருப்பதால் இக்கிரமம் மிகவும் அறியப்பட்டதாக இருந்து வந்திருக்கிறது. 

தென்னிந்தியாவிற்கும் எருக்கலம்பிட்டிக்குமிடையிலான வர்தக தொடர்புகளும், பிற தொடர்புகளும் இருந்து வந்திருக்கின்றன. இக்கிராமத்தில் காலத்திற்க்கு காலம் நடந்தேறி வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் பல தென்னிந்தியர்களின் வம்சாவழித்தொடர்புகளைக்கூறும் வரலாற்று நூல்களிலும் இடம் பெற்றிருப்பதால் இக்கிராமம் அறியப்பட்டதாக உள்ளது. மார்க்க அறிவைப் பெறுவதற்காக எருககலம்பிட்டி மக்கள் பலர் தென்னிந்தியாவிற்குச் சென்று வந்திருந்தாலும் கீழக்கரை, தொண்டி அதிராம் பட்டினம், பெறிய பட்டினம், அம்மா பட்டினம், பாம்பன பட்டினம், வேதாளை போன்ற தென்னிந்திய முஸ்லிம்களோடு திருமண உறவுகளும் ஏற்பட்டிருந்தாலும் இக்கிராமம் மேலும் அறியப்பட்டதாக இருந்து வந்திருக்கிறது. 

தென்னிந்தியாவிலிருந்தும், அரேபிய நாட்டிலிருந்தும் மார்க்க அறிஞர்களும், ஆத்ம ஞானிகளும், இறைநேசச் செல்வர்களும் இக்கிராமத்திற்கு வருகை தந்திருக்கின்றனர் அவர்களின் அடக்கஸ்தலங்களான கபுறடிகள் பல இங்கும், சூழவுள்ள பகுதிகளிலும் அமைந்திருப்பதாலும் இக்கிராமத்தின் தொன்மையை நன்கு விளங்க முடிகிறது. இவ்வூர் மக்கள் அயலிலிருந்து முஸ்லிம் கிராமங்களுடனும் கிருஸ்தவ, இந்து சமூகப்பழக்க வழக்கங்கள் பல இக்கிராமத்தின் பழக்கவழக்கங்களோடு பின்னிப்பிணையும் அளவுக்கு அன்னியோன்னியமாகப் பழகி வருகிறார்கள்.

Ads go here

Comments