Facebook தளத்தில் ஏமாறாதீர்கள்!
Facebook தளம் தற்போது நமது அன்றாட வாழ்வில் ஒன்றாக மாறி வருகிறது. கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கும் Facebook தளத்தில் பல ஏமாற்றுப் பேர்வழிகளும் சுற்றிக் கொண்டு தான் இருக்கின்றனர். அத்தகையவர்களில் ஒரு வகையினர் பற்றி தற்போது பார்ப்போம்.
இந்த ஏமாற்று பேர்வழிகள் செய்யும் மோசடி ஒரு சங்கிலித் தொடர் ஆகும்.
அதனை உங்கள் நண்பர்கள் Facebook Profileக்கு சென்றோ, அல்லது Facebookமுகப்பு பக்கத்திலோ பயன்படுத்துமாறு வழிமுறைகளை சொல்வார்கள்.
அப்படி நீங்கள் செய்தால் உங்கள் Facebook பக்கம் வித்தியாசமான Theme க்கு மாறும். இது உங்கள் கணக்கு Hack செய்யப்பட்டதற்கான அறிகுறி (உங்கள் நண்பர்கள் கணக்கு அல்ல!).
பிறகு Step ஒன்றில் சொன்ன புகைப்படத்தில் உங்கள் கணக்கு மூலம் உங்கள் நண்பர்கள் பெயர்கள் தானாக tag செய்யப்படும்.
பிறகு உங்கள் நண்பர்கள் Step ஒன்று முதல் செய்யத் தொடங்குவார்கள்.
இப்படி செய்வதினால் அவர்களுக்கு என்ன லாபம்? இருக்கிறது. இந்த பிரச்சனை இத்துடன் முடிந்துவிடவில்லை.
ஹேக் செய்யப்பட்ட உங்கள் கணக்கு மூலம் உங்களுக்கே தெரியாமல் பல்வேறு Facebook பக்கங்கள் Like செய்யப்படும்.
நீங்கள் ஏமாற்றப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் Facebook கடவுச்சொல்லை மாற்றுவது.
பிறகு உங்கள் Profileலுக்கு சென்று Activity Log என்பதை Click செய்யுங்கள்.

அங்கு உங்களுக்கு தெரியாமல் Like செய்யப்பட்டவைகள் இருக்கும். அதன் பக்கத்தில் உள்ள பென்சில் ஐகானை Click செய்து Unlike செய்துவிடுங்கள்.
இப்படி லைக் செய்யப்படும் Facebook பக்கங்கள் பணத்திற்காக விற்கப்படுகிறது. Facebook தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள், ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்…!
Ads go here
Comments