Photoshopல் தமிழில் எழுத
Photographerகள் மற்றும் Photo Graphic designer களுக்குப் (photographic designer)பயன்படும் ஓர் அருமையான மென்பொருள் Photoshop. Photoக்களை, எந்த cameraவின் மூலம் எடுத்திருந்தாலும் சரி, அவற்றை photoshop மென்பொருளில் திறந்து, Photo க்களை மேலும் அழகூட்ட முடியும். புதிய designகளை உருவாக்க முடியும். தமிழை photoshopப்பில் பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம்.
FONT பிரச்னையைத் தீர்க்க வழி
photoshopல் பயன்படுத்த விரும்பும் தமிழ் எழுத்துருக்களை தரவிறக்கம்செய்து கொண்டு, அவற்றை கணினியில் உள்ள Fonts Folderல் சேர்க்க வேண்டும்.
பிறகு NHM Writer மென்பொருளின் துணையுடன் உங்களுக்கு வேண்டிய எழுத்துக்களை உள்ளிட்டு, அவற்றை Copy செய்துகொண்டுபோய் photoshopல் past செய்யலாம். அல்லது e-Kalappai, Azhagi மென்பொருட்களினையும் பயன்படுத்தலாம். அழகி மென்பொருளிலேயே எழுத்துரு மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு.
தமிழ் FONT DOWNLOAD & INSTALL
- unicode எழுத்துருக்களிலேயே பல வடிவ எழுத்துருக்கள் உள்ளன. அவற்றை Download செய்து பயன்படுத்தலாம்.
Download here:
- .
Download tamil True Type fonts
Download செய்யப்பட்ட Fontக்களை Copy செய்துகொண்டு, Computerல் Start Buttonனை அழுத்தி,
Control Panel என்பதை Click செய்து,
Fonts Folderரை திறந்து,
அதில் Paste செய்துவிடலாம்.
NHM Converter:
NHM Converter என்பது ஒரு எழுத்துரு மாற்றி மென்பொருளாகும். இந்த மென்பொருள் மூலம் ஒரு எழுத்துருவில் உள்ள வார்த்தைகளை மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
உ.ம்.
உங்களுக்கு Unicode எழுத்துரு வேண்டும். ஆனால் BAMINi தமிழ் Type மட்டுமே தெரியும் எனில் bamini எழுத்துருவைப் பயன்படுத்தி வேண்டியதை தட்டச்சிட்டுவிட்டு, அவற்றை அப்படியே Unicode எழுத்துருவை தேர்ந்தெடுத்து Convert என்ற button மூலம் மாற்றிக்கொள்ள இயலும்.
Ads go here
Comments