(iphone) தொலைந்து போன கையடக்க தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி?



ipad அல்லது iphone வைத்திருக்கும் நண்பர்கள் பலருக்கு Find My iPhone என்ற வசதி இருப்பது தெரியாமலே இருக்கிறது. Apple சாதனங்கள் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய ஒரு வசதி.

உங்கள் Apple அதாவது – ipad அல்லது iphone தொலைந்து போனால் அதைக் கண்டுபிடிக்கவும், ஒரு வேளை திரும்ப வாங்கமுடியாத நிலையில் அந்த சாதனத்தில் இருக்கும் நமது தனிப்பட்ட தகவல்கள் – Photos, Video, Contects – அனைத்தையும் நீங்கள் இருக்குமிடத்தில் இருந்தே அழித்துவிடவும் Apple கொடுத்த வசதிதான் FindMyiPhone.

இதற்கு முதலில் உங்கள் சாதனத்தில் FindMyIphone வசதியை ஆரம்பித்து இருக்க வேண்டும்.


உங்கள் IOS சாதனத்தில் Settings -> iCloud என்ற Menuவுக்கு செல்லுங்கள். அந்த பக்கம் உங்கள் Apple Idல் Login செய்யச் சொல்லும். நீங்கள் ஏற்கனவே Apple Id உருவாக்கியிருக்காத பட்சத்தில் Get Free Apple Id என்ற butten னை அழுத்தி உருவாக்கிக் கொள்ளலாம்.

Login செய்த பிறகு, அந்த Menuவில் Find My iPhone என்ற வசதி துவக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து, ஆரம்பித்து இருக்கப்படாத பட்சத்தில் அதைத் ஆரம்பித்துக் கொள்ளவும்.

இனி உங்கள் Phone தொலைந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

Find My iPhone என்ற App AppStoreல் கிடைக்கும். அதை உங்கள் IOS சாதனத்தில் நிறுவிக்கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட APPLE சாதனங்கள் வைத்திருப்பவராக இருந்தால் தொலைந்து போன Apple சாதனத்தை இன்னொரு Apple சாதனத்தில் நிறுவியுள்ள Find My iPhone App மூலமே நீங்கள் கண்டுபிடிக்கலாம்.


ஒரே ஒரு Apple சாதனம் தான் வைத்திருப்பவர் என்றாலும் கவலை இல்லை. உங்களிடம் உள்ள கணினியில் நிறுவியுள்ள ஏதாவது ஒரு  Browser இல் www.icloud.com என்ற தளத்திற்குச் செல்லுங்கள்.





மேலே காட்டப் பட்டுள்ள பக்கத்தில் உங்கள் Apple ID யை (உங்கள் Phoneல் Login செய்த அதே Apple ID) உள்ளிட்டு Login செய்து கொள்ளுங்கள்.

Login செய்ததும் icoud டில் இருக்கும் உங்கள் தகவல்கள் அனைத்தும் தெரியும்.


இதில் Find My iPhone என்றிருக்கும் அந்த Icon னை அழுத்தினால், நீங்கள் Login செய்த Apple ID யில் இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களும் தெரியும்


இதில் நீங்கள் தேடும் சாதனத்தை அழுத்தினால் அந்த சாதனம் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் காட்டும்.


இப்போது அந்த சாதனத்தின் கீழ் Play Sound, Lock, Erase Mac(அல்லது Iphone) என்ற Buttens மூன்று இருப்பதைப் பார்க்கலாம்.



Play Sound


இந்தப் Butten னை அழுத்தினால், உங்கள் Phone Slient Mode , Vibrat Mode எந்த Mode ல் இருந்தாலும் ஒரு Beep சத்தத்தை வெளிப்படுத்தும். நீங்கள் அந்த சாதனத்தை எடுத்து Unlock செய்யும் வரை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். சத்தம் அணைக்கப்பட்ட உடன், உங்கள் Apple id யோடு இணைந்த ஈமெயிலுக்கும் ஒரு மெயிலை அனுப்பி விடும்.

Lost Mode (Mac bookக்கு Lock)



இந்த வசதி, உங்கள் Phoneனை Lock செய்துவிடும். Lock செய்வது மட்டுமில்லாமல் உங்கள் Phone னை எடுத்தவர் (அல்லது திருடியவர்) Location Services (GPS)ஐ நிறுத்தியிருந்தாரானால், தானாகத்துவக்கிவிடும். ஒருவேளை நீங்கள் Password எதுவும் தராமல் வைத்திருந்தால், இப்போது ஒரு Password கொடுத்து உங்கள் சாதனத்தை Lock செய்து கொள்ளலாம்.

உங்களிடம் ஒரு Phone Numberரையும் கேட்கும். நீங்கள் தரும் Phone Number ரை தொலைந்து போன சாதனத்தில் display செய்த வண்ணம் இருக்கும். அந்த நம்பரை அழுத்துவதன் மூலம் உங்கள் Phoneனைக் கண்டெடுத்தவர் உங்களுடன் பேச முடியும்.

உங்களிடம் ஒரு Custom Messageஐயும் கேட்கும். நீங்கள் தரும் செய்தியை Phoneனின் திரையில் ஒளிரவிட்ட வண்ணம் இருக்கும்.

Erase

இது உங்கள் Phoneல் உள்ள தகவல்கள் அனைத்தையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அழித்துவிட உதவும். இதன் மூலம் தங்களது Personal தகவல்கள் தவறானவர்கள் கையில் சிக்காமல் காப்பாற்ற முடியும்.

என்ன இருந்தாலும் Phone தொலைந்ததை உடனே நீங்கள் உணர்ந்து மேலே உள்ள நடவடிக்கைகளை எடுத்தால் தான் உங்கள் Phoneனை மீட்கவோ அல்லது தகவல்களைக் காப்பாற்றவோ முடியும். இல்லாவிட்டால் கஷ்டம் தான்.


நிச்சயம் பயனுள்ள தகவல் அதிகம் பகிருங்கள்

Ads go here

Comments