Windows XP



கால மாற்றத்திற்கேற்ப ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு.

அதுபோல உலக மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் Microsoft நிறுவனத்தின் Windows Operating System மும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.

பழைய Windows OS பதிப்புகள் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்புகளாக மாறுவதும், பழைய பதிப்புகள் நீக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளன.

அந்த வகையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கணினி பயனர்களைக் கவர்ந்து, இன்றும் கூட பயனர்கள் அதை விட முடியாத நிலையில் உள்ள இயங்குதளம் Windows XP தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

windows-xp-gone

Microsoft வெளியிட்ட விண்டோஸ் OSகளில் மிகப்பெரிய அளவில் அதிகமான பயனர்களைப் பெற்றுத் தந்த இயங்குதளம் இது.

2001 ம் ஆண்டு அறிமுகமான விண்டோஸ் XP Operting System விண்டோஸ் 8.1 விட நான்கு பதிப்புகள் முந்தையது ஆகும்.

Microsoft வெளியிட்ட Windows இயங்குதளங்களானது , ஆரம்ப கால MS – DOS லிருந்து தற்பொழுது சமீபத்தில் வெளயிடப்பட்ட விண்டோஸ் 8.1 வரை, படிப்படியான மாற்றங்களுக்கு உட்பட்டு, மேம்படுத்தபட்டு வெளிவந்தவை.

ஒவ்வொரு பதிப்பிலும் புதிய நுட்பங்கள், எளிய பயனர் இடைமுகம் என மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு பதிப்பிலும் உள்ள பிழைகள் திருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்ட பதிப்புகளாக Microsoft வெளியிட்டது.

இதனால் பயனர்கள் பழைய பதிப்பை விட்டுவிட்டு, புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு மாறி வந்தனர்.

விண்டோஸ் OS பதிப்புகள்

ஆரம்ப காலத்திலிருந்து வெளிவந்துள்ள விண்டோஸ் OS பதிப்புகள் (ஆண்டு வாரியாக)


MS-DOS – 1981

Windows 1.0 – 1985

Windows 2.0 – 1988

Windows 2.03, Windows 3.0 – 1990

Windows 3.1 – 1992

Windows NT – 1993

Windows 95 – 1995

Windows 98 – 1998

Windows 2000

Windows XP – 2002

Windows Server 2003

Windows 7 – 2007

Windows 8 – 2008

Windows 8.1




info-

tamil techno

Ads go here

Comments