எமது நாட்டில் PAYPAL ACCOUNT அனுமதிக்கப்பட உள்ளது. (இலங்கை)


Paypal பற்றி அறியாதவர்கள் எவருமில்லை. குறிப்பாக இலங்கை மக்களின் நீண்ட நாள் கவலை இலங்கையில் இருந்து கொண்டு Paypal மூலம் பணம் பெற முடியாது. 

சில மாதங்களுக்கு முன் இலங்கை ஜனாதிபதி அவர்கள், Paypal இனை இலங்கையில் உள் அனுமதிப்பது தொடர்பாக சொல்லி இருந்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், Nivard Cabraal நேற்று இது தொடர்பாக அறிவித்திருந்தார். " இலங்கை நிதியியல், தொழிநுட்ப அதிகாரிகள் இலங்கையின் உள் Paypal பண பரிமாற்றத்தை திறந்து விடுவது தொடர்பாக தீவிரமாக கலந்துரையாடுவதாகவும், விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறி இருந்தார். 

 4G LTE கிராம புறம் வரை கிடைக்கும் இலங்கையில் Paypal தடை செய்யப்பட்டு உள்ளமை இலங்கையருக்கு சங்கடமான ஒன்று. 

190 நாடுகளில் பரந்துள்ள Paypal மூலம் இலங்கையில் இருந்து இதுவரை, credit card இனை பயன்படுத்தி பணம் அனுப்பும் வசதியே உள்ளது. 

இலங்கையின் உள்நாடு - வெளிநாட்டு சிறு வர்த்தகத்தை முன்னேற்ற Paypal இனை அனுமதிப்பது முக்கியமாகிறது. இலங்கையில் உள்ள எவரும் Ebay மூலம் பொருட்களை விற்ற Paypal இலங்கையின் உள் அனுமதிக்கப்படுவது அவசியமானது. சில நாடுகள் Paypal மூலம் பணம் பெற அதிக கட்டணங்களை வசூலிக்கிறது. China இனை சேர்ந்த ஒரு வங்கி 30$ இனை அறவிடுகிறது. ஆசியாவில் Hong kong மட்டுமே 0.3 $ என்ற ஆக குறைந்த கட்டணத்தை அறவிடுகிறது. இலங்கையில் எவ்வாறு இந்த கட்டணங்கள் இருக்கும் என தெரியவில்லை. எவ்வாறாயினும் Paypal மூலம் பரிமாற்ற கூடியஆக கூடிய தொகை மட்டுப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், ஆளுநர் (SLCB) Nivard Cabraal காலத்தில் தான் அதிகளவு நிதி மாற்றங்களுக்கு விலக்களிக்கப்ப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.





Ads go here

Comments

  1. What are you trying to say dude, it seems to be that you have been copied these lines from some where else. Does srilanka allows to receive funds via PayPal i think it not preferred yet

    ReplyDelete