Facebook கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி?


நம்மில் அனைவரும் Facebookல் (முகநூல்) கணக்கு வைத்திருப்போம். அதில் பொதுவான மொழியான ஆங்கில மொழியை தேர்வு செய்திருப்போம். நாம் தேர்வு செய்யாவிட்டாலும் கணக்கு ஆரம்பித்தவுடன் ஆங்கிலமே மொழியாக எடுத்துக் கொள்ளும்பேஸ்புக்கில் பல்வேறு நாட்டில் பயன்படுத்தும் முக்கியமான மொழிகளை பயன்பாட்டு மொழியாக மாற்ற வசதி உள்ளது. அதில் நம் தமிழ் மொழியும் ஒன்று

பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி?

1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க கீழேயுள்ள படம்).


2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் கடைசியாக Language என்ற Option இருக்கும். அதில் வலது புறமாக edit என்பதை க்ளிக் செய்தால் choose primary Open ஆகும். அதில் கீழ் நோக்கிய பட்டனை அழுத்தினால் என்னென்ன மொழிகள் உள்ளன என்ற List ஓOpen ஆகும். அதில் தமிழ் மொழியை தேர்வு செய்து save changes தர வேண்டும். (பார்க்க கீழே உள்ள 3 படங்களையும்)




அவ்வளவு தான். இனி உங்கள் பேஸ்புக் கணக்கு முழுவதும் தமிழ் மொழிக்கு மாறியிருக்கும். (பார்க்க கீழேயுள்ள படம்)


பேஸ்புக்கில் நமது அடையாள பெயரை தமிழுக்கு மாற்றுவது எப்படி?

1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க மேலே முதல் படம்).

2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் முதலாவதாக name என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்களது தற்போதைய பெயர் காட்டும். அதன் வலது பக்கம் edit என்பதை க்ளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில் first, middle, last, display as என காட்டும்





3. அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பெயரை தமிழுக்கு மாற்றி, உங்கள் பேஸ்புக் password கொடுத்து save changes க்ளிக் செய்யவும்





Ads go here

Comments