Blog தொடங்குவது எப்படி? [பகுதி-5]
Blogger முகப்பு பக்கத்தில் dashboard நாம் உருவாக்கிய Blogகின் அமைவுகள் பின்வருமாறு இருக்கும்
Blogகின் பெயருக்கு கீழே,
நமது blogகின் பக்கங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? (Pageviews)
எத்தனை பதிவுகள் நமது ப்ளாக்கில் உள்ளது? (பிரசுரிக்கப்படாமல் Drafts பகுதியில் உள்ள பதிவுகளையும் சேர்த்து காட்டும்.)
எத்தனை நபர்கள் நமது ப்ளாக்கை பின்தொடர்கிறார்கள்? என்பதைக் காட்டும். இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
அதே பகுதியில் வலதுபுறம் மூன்று பட்டன்கள் இருக்கும்
- புதிய பதிவு எழுதுவதற்கு இதனை க்ளிக் செய்யுங்கள்.
- நமது ப்ளாக்கை பார்க்க இதனை க்ளிக் செய்யுங்கள்.
நமது blogகின் பக்கங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? (Pageviews)
எத்தனை பதிவுகள் நமது ப்ளாக்கில் உள்ளது? (பிரசுரிக்கப்படாமல் Drafts பகுதியில் உள்ள பதிவுகளையும் சேர்த்து காட்டும்.)
எத்தனை நபர்கள் நமது ப்ளாக்கை பின்தொடர்கிறார்கள்? என்பதைக் காட்டும். இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
அதே பகுதியில் வலதுபுறம் மூன்று பட்டன்கள் இருக்கும்
Overview:
Overview - என்பதை க்ளிக் செய்தால் நமது Blog பற்றிய விவரங்களை மேலோட்டமாக காட்டும்.
Pageviews:
நமது ப்ளாக்கின் பக்கங்கள் கடந்த ஒரு வாரத்தில் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? என்பதை சிறிய விளக்கப்படமாகக் காட்டும். அதற்கு கீழே அதிகமான வாசகர்களை நமது தளத்திற்கு பரிந்துரை செய்த முதல் மூன்று தளங்களைக் காட்டும்.Updates:
நம்முடைய அனுமதிக்காக காத்திருக்கும் பின்னூட்டங்கள், பிரசுரித்த பின்னூட்டங்கள், இன்று நமது ப்ளாக் பக்கங்கள் பார்க்கப்பட்டவைகள், மொத்தப் பதிவுகள், நமது ப்ளாக்கை பின்தொடற்பவர்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைகளை காட்டும்.
News from Blogger:
ப்ளாக்கரில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதிகள் பற்றியும், புதிய செய்திகளைப் பற்றியும் http://buzz.blogger.com/ என்ற ப்ளாக்கில் ப்ளாக்கர் தளம் பதிவிட்டு வருகிறது. அதில் பதியப்பட்ட சமீபத்திய பதிவுகளை இங்கு காட்டும்.
Recent Blogs of Note:
சிறந்த ஆங்கில Blogger தளங்களை தினமும் http://blogsofnote.blogspot.com/ என்ற தளத்தில் ப்ளாக்கர் தளம் பகிர்கிறது. அவற்றை இங்கு காட்டும்.
Blogger Guide:
பதிவர்களுக்கு பயன்படும் வகையில் சில உதவிக் குறிப்புகளை இங்கு காட்டும். அந்த இணைப்புகளை சொடுக்கி தெரிந்துக் கொள்ளலாம்.
Blog தொடங்குவது எப்படி?[பகுதி-3]
Blog தொடங்குவது எப்படி?[பகுதி-4]
ஜஸாகல்லாஹு ஹைரன் Blog நண்பன் அப்துல் பாசித்
Create By:
வஜீஹு சர்பான் - புத்தளம் (இலங்கை)
Ads go here
Comments