Blog தொடங்குவது எப்படி? [பகுதி-4]
(Blogger) Profile என்பது உங்களைப் பற்றிய சுயவிவரப் பக்கமாகும். இதன் மூலம் வாசகர்கள் உங்களைப் பற்றி அறிந்துக் கொள்வார்கள். இதனை திருத்தம் செய்வது பற்றி பார்ப்போம்.
நீங்கள் Bogger Dasboard சென்றால் அங்கு மேலே வலதுபுறம் உங்கள் மின்னஞ்சல் முகவரி இருக்கும். அதனை Clickசெய்தால் பின்வருமாறு வரும்.
அதில் Blogger Profile என்பதை Click செய்தால் பின்வரும் பக்கம் வரும்.
அதில் User Stats என்ற இடத்தில் நீங்கள் எப்பொழுது பிளாக்கரில் இணைந்தீர்கள்? என்பதையும், உங்கள் Profile பக்கத்தை எத்தனை நபர்கள் பார்த்தார்கள்? என்பதையும் என்பதையும் காட்டும். Profileல் திருத்தம் செய்ய Edit Profileஎன்பதை சொடுக்கவும்.
இதில் சிலவற்றை மற்றும் இங்கு பார்ப்போம். மற்றவைகளை விருப்பமிருந்தால் பூர்த்தி செய்யலாம்.
Share My Profile - உங்கள் சுயவிவரப் பக்கம் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்றால் பெட்டியில் டிக் செய்யவும். வேண்டாம் என்றால் வெறுமனே விட்டுவிடவும்.
Show My Email Address- உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்றால் பெட்டியில் டிக் செய்யவும். வேண்டாம் என்றால் வெறுமனே விட்டுவிடவும்.
Show My Blogs - நீங்கள் உருவாக்கியத் தளங்கள் தெரிய வேண்டுமா? என்பதை Select blogs to display என்பதை க்ளிக் செய்து தேர்வு செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்கள் இருந்தால் குறிப்பிட்டவற்றை மட்டும் தெரிய வைக்கலாம்.
Show Sites I Follow - நீங்கள் பின்தொடரும் தளங்கள் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்றால் பெட்டியில் டிக் செய்யவும். வேண்டாம் என்றால் வெறுமனே விட்டுவிடவும்.
Home Page URL - இங்கு உங்கள் தளத்தின் முகவரியை கொடுக்கவும்.
மேலும் பல இடங்களில் உங்களுக்கு விருப்பமானதை பூர்த்தி செய்யலாம் அல்லது வெறுமனே விட்டுவிடலாம். பூர்த்தி செய்த பின் Save profile என்பதை க்ளிக் செய்யவும்.
ஜஸாகல்லாஹு ஹைரன் Blog நண்பன் அப்துல் பாசித்
Create By:
வஜீஹு சர்பான் - புத்தளம் (இலங்கை)
Ads go here
Comments