Windows XP முடிவுக்கு வர இருக்கின்றது அதன் பின்னர் புதிய இயங்குதளங்களுக்கு தமது கணினிகளை புதுப்பித்துக்க


அடுத்த வாரம் அதாவது April 8 ஆம் திகதிமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows XP இயங்குதள பாவனை முடிவுக்கு வர இருக்கின்றது. அதன் பின்னர் புதிய இயங்குதளங்களுக்கு தமது கணினிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதனையிட்டு புதிய இயங்குதளங்களுக்கு நகர இருப்பவர்களுக்காக PCmover Express எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது Microsoft நிறுவனம்.
இதன் மூலம் Windows XP இல் இருக்கக் கூடிய அனைத்து தரவுகளையும் அதாவது பயனர் கணக்குகள், கணனியில் நீங்கள் மேற்கொண்டுள்ள அமைப்புக்கள், தேவையான கோப்புறைகள் போன்றவற்றினை Windows 7, Windows 8/8.1 போன்ற புதிய இயங்குதளங்களுக்கு மிக இலகுவாக நகர்திக்கொள்ள முடியும்.

மேலும் குறிப்பிட்ட மென்பொருள் இரண்டு கணனிகளிலும் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் தரவுகளை Data Cable மூலமாகவோ LAN வலையமைப்பினூடாகவோ தரவுகளை பரிமாறிக்கொள்ள முடியும்.

குறிப்பிட்ட மென்பொருளை நீங்களும் Microsoft இன் உத்தியோக பூர்வ இணைய தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.







Best regards,

Ads go here

Comments