வைரஸ் தாக்கத்தால் மறைக்கப்பட்ட கோப்புக்களை மீளப் பெறமுடியவில்லையா


உங்கள் கணணியில் ஏற்படும் வைரஸ் தாக்கத்தால் சிலவேளைகளில் கணணியில் உள்ள கோப்புக்கள் மறைக்கப்பட்டிருக்கும். இவற்றை Folder Options சென்று “ Show hidden Folders” என்பதைத் தெரிவுசெய்தே மீளப் பார்க்கலாம். இதில் சிலவேளை “ Show hidden Folders” என்பதைத் தெரிவுசெய்தாலும் வைரஸ் தாக்கம் காரணமாக தன்னிச்சையாகவே மீண்டும் மீண்டும் ஆவணங்கள் மறைக்கப்பட்டுவிடும். இதனால் அவற்றை எப்படிப் பார்ப்பதென்று நீங்கள் எண்ணலாம். அதற்கு தீர்வாக இப்பதிவு அமையும்.
இதற்கு முதலில் Start Button இனுள் சென்று “RUN” என்பதை கிளிக் செய்து
Search Regedit
அதனை திறந்துகொள்ளுங்கள்.

பின்னர் கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று Show all என்பதை அடையவும்.


HKEY_LOCAL_MACHINE\SOFTWARE

Microsoft

Windows

CurrentVersion

Explorer

Advanced

Folder

Hidden

SHOWALL

இப்போ வலப்பக்கத்திலே உள்ள CheckedValue என்பதை Double-Click செய்து திறந்துகொள்ளவும்.


இதிலே “Value data” இல் “1” என்றுள்ளதற்குப் பதிலாக 2 ஐக் கொடுத்து OK பண்ணவும்.
இப்போ மறைக்கப்பட்ட கோப்புக்கள் மீளத் தென்படும்.
Ads go here

Comments