Blog தொடங்குவது எப்படி? [பகுதி-2]
கடந்த பகுதியில் Blog பற்றிய சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம். தற்போது புதிய Blog ஒன்றை உருவாக்குவோம். அதற்கு முன் நமது Blog கின் பெயர் எப்படி இருக்க வேண்டும்? என்று பார்ப்போம்.
Blog ற்கு பெயர் வைப்பது எப்படி?
Blog ற்கு பெயர் வைக்கும் போது முடிந்தவரை சிறியதாகவும், நினைவில் நிற்கும்படியும் வையுங்கள். மேலும் நீங்கள் எதைப் பற்றி எழுதுகிறீர்களோ? அது தொடர்பான பெயராக இருக்கட்டும். தமிழ் Blog ற்கு பெயர் வைக்கும் போது அந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது எழுத்துக்களில் குழப்பம் வராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.உதாரணத்திற்கு "தினச்செய்தி" என்று பெயர் வைத்தால் அதனை ஆங்கிலத்தில் "thinachcheithi", "dinaseithi", "dhinachcheithi", "thinaseithi" இப்படி பல குழப்பங்கள் வாசகர்களுக்கு வரலாம். அதனால் இதனை தவிர்ப்பது நல்லது. பல வாசகர்கள் உங்கள் தளத்தை BookMark செய்திருக்கலாம். ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்கள் Bookmark மூலம் வருவதில்லை. வேறொரு கணினிகளை பயன்படுத்தினால் நேரடியாக உங்கள் தள முகவரியைக் கொடுத்து வருவார்கள். அது போன்ற சமயங்களில் குழப்பம் ஏற்படும்.
சரி, இனி Blog ஒன்றை தொடங்கிவிடுவோம்.
புதிய Blog உருவாக்குவது எப்படி?
1. முதலில் www.blogger.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.
2. உங்களுக்கு Gmail அல்லது வேறொரு Google கணக்கு இருந்தால் அதன் மூலம் உள்நுழையுங்கள். இல்லையென்றால் புதிதாக Gmai ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
3. பிறகு படத்தில் காட்டியவாறு செய்யுங்கள்
5. பிறகு உங்கள் Dashboard தோற்றம் பின்வருமாறு இருக்கும்.
Dashboard பக்கத்தில் உள்ளவைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் பிறகு பார்க்கலாம்.
( ஏற்கனவே எனக்கு 4 Blog இருப்பதால் இவ்வாறு காட்டுகிறது )
6. புதிய ப்ளாக் ஒன்றை உருவாக்க New Blog என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
அதில்,
Title என்ற இடத்தில் Blog பெயரைகொடுங்கள் .
Example : - விளம்பரங்கள்
Address என்ற இடத்தில் உங்கள் Blog ற்கான முகவரியையும் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் முகவரி ஏற்கனவே இருந்தால் ஏற்றுக் கொள்ளாது. வேறொன்றை முயற்சிக்கவும்
Address என்ற இடத்தில் உங்கள் Blog ற்கான முகவரியையும் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் முகவரி ஏற்கனவே இருந்தால் ஏற்றுக் கொள்ளாது. வேறொன்றை முயற்சிக்கவும்
Template என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்டை (உங்கள் Template) தேர்வு செய்யுங்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இதனை மாற்றிக் கொள்ளலாம். பிறகு Create Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்
அவ்வளவு தான்! உங்களுக்கான புதிய Website உருவாகிவிட்டது. அதனை பார்க்க View Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.
சோதனைக்காக நான் உருவாக்கி இருக்கும் ப்ளாக்,
பெயர்: விளம்பரங்கள்
முகவரி: www.SriLankamarket.blogspot.com
இறைவன் நாடினால் புதிய பதிவு எழுதுவது பற்றி அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.
ஜஸாகல்லாஹு ஹைரன் Blog நண்பன் அப்துல் பாசித்
Create By:
வஜீஹு சர்பான் - புத்தளம் (இலங்கை)
kmwsarfan@gmail.com
http://www.sarfan.blogspot.com
Create By:
வஜீஹு சர்பான் - புத்தளம் (இலங்கை)
kmwsarfan@gmail.com
http://www.sarfan.blogspot.com
Ads go here


Comments