மங்கலான புகைப்படங்களை சரி செய்யும் இணையதளம்.
உங்களிடம் மங்கலான புகைப்படங்கள் இருக்கின்றனவா?
இந்த கேள்வியை கேட்பது smartdeblur இணையதளம் .மங்கலான புகைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை .
புகைப்படத்தில் உள்ள காட்சி தெளிவில்லாமல் இருப்பதோடு , பின்னணி மங்கி இருக்கும் படங்கள், அருகே உள்ள உருவங்கள் கலைக்கப்பட்டது போல இருக்கும் படங்கள் என தெளிவில்லாமல் காட்சி தரும் எல்லா வகையான் புகைப்படங்களும் தான். camera கோணம் சரியாக இல்லாததில் துவங்கி , கிளிக் செய்யும் போது காமிராவில் ஏற்பட்ட அசைவு என பல காரணங்களினால் புகைப்படம் தெளிவில்லாமல் போகலாம்.
camera phone யுக்த்தில் உங்கள் வசமே கூட இப்படி பல் புகைப்படங்கள் இருக்கலாம். இதை தான் ஸ்மார்ட்டிபிலர் அக்கறையோடு கேட்கிறது. மங்கலான புகைப்படங்கள் உங்கள் வசம் இருந்தால் அவற்றை ஒரே கிளிக்கில் இந்த தளம் சரி செய்து தருகிறது.
போட்டொஷாப் தெரிந்தவர்கள், சாதாரன புகைப்படங்களில் கூட வண்ணங்கள் மற்றும் இதர அம்சங்களை திருத்தி அந்த புகைப்படத்தை அப்படியே மேம்படுத்தி தருவார்கள். அதே போல இந்த தளம் தன்னிடம் சமர்பிக்கப்படும் மங்கலான புகைப்படங்களை திருத்தி மேம்படுத்தி தருகிறது. இதற்காக உங்களுக்கு போட்டோஷாப் தெரிந்திருக்கவும் வேண்டாம் . இதில் உள்ள சாப்ட்வேரை டவுண்லோடு செய்து கொண்டால் போதும். கட்டண சேவையும் இருக்கிறது.
இதைக்கேட்டால் ஏதோ மாயம் போல இருக்கும். ஆனால் இதன் பின்னே இருப்பது மாயம் எல்லாம் இல்லை, பிலைண்ட் டிகன்வ்லயூஷ்ன் எனும் கோட்பாடு தான் என்கிறார் விலாதிமீர் யூழிகோ. இவர் தான் இந்த தளத்தை உருவாக்கியிருப்பவர். எளிதானதே தவிர புரிந்து கொள்ள கொஞ்சம் சிக்கலான கோட்பாடு இது என்கிறார். இதற்கான விளக்கத்தை தனியே கொடுத்துள்ளார். கணிதவியல் சம்ன்பாடுகளுடன் ஏதோ கல்லூரி பாட தேற்றத்துக்கான விளக்கம் போல இருக்கும் அந்த விளக்கத்தை முழுவதும் படிக்க முடிகிறதோ இல்லையோ. விலாதிமீரின் திறமை மீது மதிப்பு பிறக்கும்.
இணையதள முகவரி: http://smartdeblur.net/
Best regards,
Your Name
tel.:
fax:
kmwsarfan@gmail.com
http://www.sarfan.blogspot.com
tel.:
fax:
kmwsarfan@gmail.com
http://www.sarfan.blogspot.com
Ads go here

Comments